News
முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்பட்டுவரும் சேத்துப்பட்டு உயிரி-எரிவாயு ஆலைக்கு (Bio-CNG Plant) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
Published : Jul 21, 2026 03:50:33 PM - 3 months ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் (20.07.2026), பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்பட்டுவரும் சேத்துப்பட்டு உயிரி-எரிவாயு ஆலைக்கு (Bio-CNG Plant) நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.கே. ராம்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.ப. மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்
