News
அகஸ்ட் 5ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு
Published : Jul 21, 2026 03:35:57 PM - 3 months ago
தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் செய்தியாளர்களைச் சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை (Budget) மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவை ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்யப்பட உள்ளன. மேலும், அதிமுகவிலிருந்து விலகிய மூன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கட்சித் தாவல் புகார்கள் குறித்தும் சபாநாயகர் விசாரணை நடத்தி வருகிறார்.
