News
டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகளுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்) தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் காலிப் பணியிடங்களும் 508 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
Published : Jul 21, 2026 03:33:06 PM - a week ago
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்) அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த மே மாதம் 20-ம் தேதி அன்று வெளியிட்டது. அதில் உதவி பொறியாளர், வேளாண் விரிவாக்க அலுவலர், தோட்டக்கலை அலுவலர், உதவி இயக்குநர் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்), தொல்லியல் அலுவலர், இளநிலை அறிவியல் அலுவலர், பால்வள துணை மேலாளர், வட்டார சுகாதார புள்ளியியலாளர், ஜூனியர் ஃபோட்டோகிராபர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) உள்பட பல்வேறு விதமான பதவிகளில் மொத்தம் 401 காலிப்பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் மே 27 முதல் ஜூன் 25 வரை பெறப்பட்டன. தேர்வு நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது
