தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவிரி நீர் உரிமையை மீட்டெடுக்கவும், மேகதாது திட்டத்திற்கு எதிராகத் தீவிர முழக்கங்களை எழுப்பினர்
Published : Jul 20, 2026 05:48:00 PM - 2 weeks ago
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவிரி நீர் உரிமையை மீட்டெடுக்கவும், மேகதாது திட்டத்திற்கு எதிராகத் தீவிர முழக்கங்களை எழுப்பினர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில்,
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை அமைக்கத் முயலும் கர்நாடக அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும் கழகத் தலைவர் திரு.
@mkstalin
அவர்களின் நெறிப்படுத்துதலின்படி, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவசாயிகளின் அடையாளமாகப் பச்சைத் துண்டு அணிந்து நாடாளுமன்றப் பணிகளில் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும், அவை ஒத்திவைக்கப்பட்ட வேளையில் நாடாளுமன்ற வளாகத்திலும் தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை மீட்டெடுக்கவும், மேகதாது திட்டத்திற்கு எதிராகத் தீவிர முழக்கங்களை எழுப்பினர்.
உழவர்களின் துயரங்களைப் போக்கவும், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்க முற்படுவோருக்கு எதிராகச் சமரசமின்றிச் குரல் கொடுக்கவும் தி.மு.க. எப்பொழுதும் உறுதுணையாய் நிற்கும். என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் குரல் எழுப்பி உள்ளனர்
