News
மேட்டூர் அணை,மேகதாது அணை குறித்து முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் சட்ட வல்லுநர்கள் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்
Published : Jul 20, 2026 05:37:22 PM - 2 weeks ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் (20.7.2026) தலைமைச் செயலகத்தில், மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து நீர்வராத நிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் சட்ட வல்லுநர்கள் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. என். ஆனந்த், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., அரசு தலைமை வழக்கறிஞர் திரு. விஜய் நாராயண், நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் சத்யபிரத சாகு, இ.ஆ.ப., சட்டத்துறைச் செயலாளர் திருமதி பி. சுமதி, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் திரு. ஆர். சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
