டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் பேரணியில் தடி அடி ,கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு - நடப்பது என்ன?
Published : Jul 20, 2026 05:28:08 PM - 3 months ago
நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி காவல்துறை லேசான தடியடி நடத்தியது.
நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இன்று ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி காவல்துறை லேசான தடியடி நடத்தியது. இந்தப் போராட்டத்தால் புது டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (Cockroach Janta Party - CJP), மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்திய நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியால் (Chalo Sansad March) மத்திய டெல்லியில் உச்சக்கட்ட பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது.*
* டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் பட்டேல் சௌக் மெட்ரோ நிலையம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு, தடையை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்றனர்.
* போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க நாடாளுமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளன.
* போலீசார் அமைத்திருந்த இரும்பு பேரிகேடுகளை போராட்டக்காரர்கள் உடைத்து எறிய முயன்றதால், கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்
* அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த துணை ராணுவப் படையினர், வஜ்ரா வாகனங்கள் மற்றும் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் வாட்டர் கேனான் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
* பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய டெல்லியின் முக்கிய பகுதிகளில் இணையச் சேவைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.
