நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் எதிர்க்கட்சி அமளியால் ஒத்திவைப்பு.
Published : Jul 20, 2026 03:15:38 PM - 2 weeks ago
இன்று நாடாளுமன்றம் கூடியதும் மறைந்த பிரபலங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் ஒரு பகுதியாக, கத்தாரின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி உள்ளிட்ட பல முக்கிய ஆளுமைகளுக்கு இரு அவைகளும் அஞ்சலி செலுத்தின.
மக்களவையில் அமளி நிலவிய சூழலில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை திருத்த மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதாவானது, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கையை, தலைமை நீதிபதி உட்பட நிரந்தரமாக 38 ஆக உயர்த்த வகை செய்கிறது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று காலை சலசலப்புடன் தொடங்கியது. அவை கூடிய சில நிமிடங்களிலேயே நீட் வினாத்தாள் கசிவு மற்றும் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன.
மாநிலங்களவையில், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த விவகாரங்களை எழுப்பியதுடன், டெல்லியில் நடைபெறும் போராட்டங்களை அரசு ஒடுக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், இரு அவைகளிலும் ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பினர்.
