News
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும்.-கனிமொழி எம்.பி
Published : Jul 20, 2026 12:08:12 PM - 2 weeks ago
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும்.-கனிமொழி எம்.பி
திமுக துணைப் பொதுச் செயலாளாரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருருமான கனிமொழி எம்.பி., எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயமை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.