முதலமைச்சர் விஜய்யை விமர்சித்ததற்காக திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், அதிரடியாகக் கைது
Published : Jul 20, 2026 11:57:08 AM - 2 weeks ago
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி.மார்க்கண்டேயன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில் தமிழக முதலமைச்சர் சி..ஜோசப் விஜய்யை ஒருமையில் விமர்சித்துப் பேசியதோடு, அவருக்குக்.கொலைமிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் முதலமைச்சர் விஜய்யை விமர்சித்ததற்காக திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக முதலமைச்சர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து திருச்செந்தூர் நீதிமன்றம் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது கவனிக்கத்தக்கது.
