10 தேசிய விருதுகளைத் தமிழ்ப் படங்கள் அள்ளியுள்ளன.
Published : Jul 19, 2026 04:46:08 PM - 2 weeks ago
10 தேசிய விருதுகளைத் தமிழ்ப் படங்கள் அள்ளியுள்ளன.
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகை களுக்கு 'தேசிய விருதுகள்' வழங்கப்பட்டுவருகிறது. இயக்குனர், ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகினறன.
அந்தவகையில் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன.
2024-ம் ஆண்டு திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்று அளிக்கப்பட்ட திரைப்படங்கள் தேசிய விருதுக்கான தேர்வில் பங்கேற்றன. இந்நிலையில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. 10 தேசிய விருதுகளைத் தமிழ்ப் படங்கள் அள்ளியுள்ளன.
1 நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிறந்த தமிழ்ப் படம் என்ற விருதுக்கு தேர்வாகியுள்ளது.
சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2 சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.
3 சிறந்த தேசிய நடிகர் விருதை நடிகர் மம்மூட்டியும், இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யனும் இணைந்து பெறுகின்றனர். பிரம்மயுகம் திரைப்படம் நடித்ததற்காக மம்மூட்டிக்கும், சந்து சாம்பியன் படத்தில் நடித்ததற்காக நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கும் விருது பகிர்ந்து வழங்கப்படவுள்ளது.
4 . ஆர்ட்டிக்கிள் 370 இந்திப் படத்தில் நடித்த நடிகை யாமி கவுதமுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்படவுள்ளது.
5 . சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன
அமரன் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி வென்றுள்ளார்.
6 . சிறந்த எடிட்டிங் பிரிவில் ஆர்.கலைவாணனுக்கும் விருது வழங்கப்படவுள்ளது.
7 . கேப்டன் மில்லர் படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்கான படமாக கேப்டன் மில்லர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான (சிறப்புப் பிரிவு) தேசிய விருது அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
8 .அரவிந்த்சாமி, கார்த்தி நடித்த திரைப்படமான ‘மெய்யழகன்’ (சிறப்புப் பிரிவு) படத்துக்கு சிறந்த ஒலிக்கலவைக்கான (சவுண்ட் மிக்ஸ் டிசைன்) விருது சுரேன். ஜிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
9. விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த மகாராஜா படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த துணை நடிகை பிரிவில் சச்சனா நமிதாஸும், சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான பிரிவில் அனல் அரசுவும் இந்த விருதைப் பெறவுள்ளனர்.
10 . அதேபோல் புளூ என்ற தமிழ்ப் படத்துக்கு (நான் ஃபீச்சர் பிரிவு) சிறந்த ஒலி வடிவமைப்புக்கான (பெஸ்ட் சவுண்ட் டிசைன்) விருதை ஹரிஹர சுதன் பெறவுள்ளார்.
நடிகர் மம்மூட்டி
பிரம்மயுகம் படத்துக்காக தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள மலையாள நடிகர் மம்மூட்டி 4-வது முறையாக தேசிய விருதைப் பெறுகிறார்.
