லஞ்சம் வாங்கிய 7 மாநகராட்சி அலுவலர்கள் சஸ்பெண்ட் 3 பேர் மீது வழக்குப் பதிவு
Published : Jul 19, 2026 10:28:17 AM - 2 weeks ago
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி மண்டல அலுவலகங்களில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற சோதனையில் கணக்கில்வராத பணம் யுபிஐ பரிவர்த்தனை மூலம் லஞ்சம் கைமாறியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மாநகராட்சி மண்டலங்களில் நடைபெற்ற சோதனை அடிப்படையிலான அறிக்கைகளை வழங்கியதன் அதனடிப்படையில், 7 பேரை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். திரு.வி.க.நகர் மண்டலத்தில் செயற் பொறியாளர் ஆர்.சரவணன், உதவி செயற்பொறியாளர் டி.ரவிவரமன், உதவி பொறியாளர் டி.சரஸ்வதி, வருவாய் பிரிவு இளநிலை உதவியாளர். மணிகண்டன் ஆகிய 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தேனாம்பேட்டை மண்டலத்தில் கண்காணிப்பாளர் ஏ.ஸ்ரீராமுலு, சுகாதார ஆய்வாளர் ஏ.மஞ்சித் ஹுசைன், தூய்மைப் பணி மேற்பார்வையாளர் ஆர்.கோதண்டன் ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு எஃப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது
