News
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Published : Jul 17, 2026 04:43:39 PM - 2 weeks ago
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
ஹரியானாவின் ஜிந்த் நகரில் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததில் நான் பெருமை கொள்கிறேன். இது, தூய்மையான, பசுமையான மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவைக் கட்டமைக்கும் திசையில் ஒரு மாபெரும் சாதனையாகும். அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்த ரயில், இந்தியாவின் தொழில்நுட்பத் திறனுக்கு ஓர் அடையாளமாக இருப்பதுடன், ஒட்டுமொத்த உலகிற்கே ஒரு முன்மாதிரியாகவும் திகழ்கிறது.
அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 3 ரயில் நிலையங்கள் புனரமைப்பு. சென்னை பூங்கா, சின்னசேலம், குன்னூர் ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. ஹரியானா மாநிலம் ஜிந்த் நகரில் இருந்து சோனிப்பட்டுக்கு ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படுகிறது.
