54 புதிய உயர் ரக மது வகை டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்த முடிவு
Published : Jul 17, 2026 09:25:02 AM - 2 weeks ago
டாஸ்மாக் கடைகளில் 54 புதிய உயர் ரக மதுபானங்களை பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்வதற்கான திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் வகுத்துள்ளது.
மதுப்பிரியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று மதுவகைகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
‘‘டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் பிற மாநிலங்களில் இருந்து வெளிநாட்டு மதுபானங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கிடைக்காத பல்வேறு பிராண்ட் பீர் மற்றும் மதுபான வகைகள் கிடைக்கும். தற்போது 100 பிராண்ட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் அதில் சில மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு பிடித்தவையாக இருக்கின்றன.
நுகர்வோரின் விருப்பத்தின்படி 54 புதிய உயர் ரக பிராண்ட் மதுவகைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறோம். இதற்கான இறுதி ஒப்புதல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்’’ என்றார்.
