பாஜகவோடு திமுக நாளையே கைகோக்கும் நிலை வரலாம்-தொல். திருமாவளவன்
Published : Jul 16, 2026 10:42:33 AM - 4 months ago
பாஜகவோடு திமுக நாளையே கைகோக்கும் நிலை வரலாம்-தொல். திருமாவளவன்
தமிழ்த் தேசிய மாநாட்டுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டங்களை உள்ளடக்கிய மைய மண்டல செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அப்போது பேசிய தொல். திருமாவளவன்
திருச்சி: பாஜகவோடு திமுக நாளையே கைகோக்கும் நிலை வரலாம் என்று தொல். திருமாவளவன் தெரிவித்தார்
தமிழ்த் தேசியத்தை முதன்மையாக கொண்ட அரசியல் இயக்கம் என்றால் அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். இருமொழிக் கொள்கையை அண்ணா கொண்டுவந்தாலும் அதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.
பெரியார் சிந்தனையும், அம்பேத்கர் சிந்தனையும் ஒன்று. அதை முன்னெடுக்கும் திமுகவோடு இணைந்து பயணிப்பதுதான் சநாதனத்தை எதிர்ப்பதற்குச் சரியாக இருக்கும்.
ஒருவேளை பாஜகவுடன் நாளையே திமுக கைகோக்கும் நிலை வரலாம். அது வேறு. ஏற்கெனவே கை கோத்திருக்கலாம். எதிர்க்கிறபோது அவர்களின் நட்பு வேண்டும். அதனால் சேர்ந்திருக்கிறோம். ஜாதி ஒழிப்பு என்பது எப்படி முக்கியக் கோட்பாடோ, அதேபோல தமிழ்த் தேசியம் என்பதும் விசிகவின் முக்கியக் கோட்பாடாகும் என்றார் அவர்.
