News
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தமிழக தவெக அரசு, நிலுவையில் இருந்த அந்த மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றுள்ளது.
Published : Jul 16, 2026 10:32:06 AM - 2 weeks ago
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கடந்த திமுக ஆட்சியில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போதைய தமிழக தவெக அரசு, நிலுவையில் இருந்த அந்த மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் சிபிஐ விசாரணைக்கான தடைகள் விலகி, வழக்கு அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.
