News
செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது ஏன்? – அன்புமணி சொன்ன ரகசியம்
Published : Apr 12, 2026 02:35:18 PM - 4 months ago
செஞ்சி தொகுதி எம்எல்ஏ-வாக இருக்கும் செஞ்சி மஸ்தான், மூன்று ஆண்டுகள் அமைச்சராக இருந்தார். அவரின் அமைச்சர் பதவியும், மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது ஏன் என்ற ரகசியத்தை நான் இப்போது உங்களுக்கு சொல்கிறேன்.
மரக்காணத்தில் 22 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தார்கள் அதனை விற்றது மரூர்.ராஜா என்ற நபர். அவருக்கு ஆதரவு கொடுத்து பாதுகாத்த காரணத்தால் செஞ்சி மஸ்தானின் பதவி பறிக்கப்பட்டது.
கள்ளச்சாராயம் விற்கும் நபரை காக்கக்கூடிய, குண்டர்களுக்கும், தேச துரோகிகளுக்கும் அடைக்கலம் கொடுக்கக்கூடிய செஞ்சி மஸ்தானுக்கு வாக்களிக்க கூடாது.
_– செஞ்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு_
