News
முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. பெ. சண்முகம் அவர்கள் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்துப் பேசினார்
Published : Jul 15, 2026 07:45:55 PM - 2 weeks ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை (15.7.2026) தலைமைச் செயலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. பெ. சண்முகம் அவர்கள் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்துப் பேசினார். உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் திரு. எம்.பி. ராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு. ஜி.எம். நாகராஜன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. பி. டில்லிபாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் திரு.டி.கண்ணன் மற்றும் விவசாயிகள் திரு. மு.தங்கமலை, திரு. ஆர். லிங்கம், திரு. மருதுபாண்டி ஆகியோர் உள்ளனர்.
