News
15 CBSE மற்றும் பிற வாரிய பள்ளிகள் துவங்க தடையின்மைச் சான்றுகளையும், 10 தனியார் பள்ளிகளுக்கு துவக்க அனுமதி ஆணைகளையும் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் வழங்கினார்.
Published : Jul 14, 2026 07:48:03 PM - 4 months ago
(14.07.2026) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் 15 CBSE மற்றும் பிற வாரிய பள்ளிகள் துவங்க தடையின்மைச் சான்றுகளையும், 10 தனியார் பள்ளிகளுக்கு துவக்க அனுமதி ஆணைகளையும் வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. சந்திர மோகன். B இ.ஆ.ப., பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர். ச. கண்ணப்பன் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் திருமதி ச. சுகன்யா ஆகியோர் உடனிருந்தனர்.
