News
முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
Published : Jul 14, 2026 03:42:56 PM - 3 weeks ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் (14.7.2026) தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திருமதி சி. விஜயலட்சுமி, மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.நெ. மரிய வில்சன், மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திருமதி செ. கமலி, தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. மு.அ.சித்திக், இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் திருமதி அனு ஜார்ஜ், இ.ஆ.ப. மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
