News
மாணவர்களின் பயன்பாட்டுக்காக ரூபாய் 70 இலட்சம் மதிப்பீட்டில் 18 பள்ளிகளுக்கு 900 இருக்கைகள் (Bench, Desk) வழங்கினார்கள் மைச்சர் திரு.ராஜ்மோகன் ,அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா
Published : Jul 14, 2026 03:38:03 PM - 3 weeks ago
சென்னை எழும்பூர் மாகாண மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (14.07.2026) மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் ஆகியோர் ஹூண்டாய் மொபிஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் மாணவர்களின் பயன்பாட்டுக்காக ரூபாய் 70 இலட்சம் மதிப்பீட்டில் 18 பள்ளிகளுக்கு 900 இருக்கைகள் (Bench, Desk) வழங்கினார்கள். இந்நிகழ்வில் சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. மாலதி ஹெலன், இ.ஆ.ப., பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் முனைவர். ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ.நரேஷ், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. மு.கபீர், ஹூண்டாய் மொபிஸ் (Hyundai Mobis) நிறுவனத்தின் பொது மேலாளர் திரு. ஹூ மின் ஹோ, மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
