News
சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு. ஜே. சி. டி. பிரபாகர்,அமைச்சர் மரு. கோ. க. அருண் ராஜ் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினார்கள்
Published : Jul 11, 2026 04:29:26 PM - 3 weeks ago
(11.07.2026) சென்னை மருத்துவ கல்வி இயக்குநரக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு. ஜே. சி. டி. பிரபாகர், மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு. கோ. க. அருண் ராஜ் ஆகியோர் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் முனைவர்தாரேஸ் அகமது, இ.ஆ.ப., தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் மரு. எஸ். அனீஸ் சேகர், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தேனாம்பேட்டையில் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு. ஜே. சி. டி. பிரபாகர், மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு. கோ. க. அருண் ராஜ் ஆகியோர் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை செம்மொழி பூங்காவில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் முனைவர்தாரேஸ் அகமது, இ.ஆ.ப., தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் மரு. எஸ். அனீஸ் சேகர், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
