News
தமிழ்நாடு அரசின் சார்பில் தந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் திரு. ராஜ்மோகன்,அமைச்சர் திரு. ராஜீவ், ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
Published : Jul 11, 2026 04:26:51 PM - 3 weeks ago
(11.7.2026) தமிழ்நாடு அரசின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, எழும்பூர் இரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன், மாண்புமிகு சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. ராஜீவ், ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் திரு. க.வி.விஜய் தாழு, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை / தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் (பொ) திரு.வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
