தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தியாகராய நகரில் கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் .
Published : Jul 11, 2026 09:19:26 AM - 3 weeks ago
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தியாகராய நகரில் கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் .
பின் செய்தியாளர்களிடம் மாணிக்கம் தாகூர் கூறியதாவது: மரியாதை நிமித்திமாக இந்த சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்திய கூட்டணியில் மிக முக்கியமான அங்கமாக விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன
தமிழக காங்கிரஸ் எப்போதும் தமிழக விவசாயிகளின் பக்கம் தான் காவிரி விவகாரத்தை பொறுத்தவரை .இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒத்த கருத்துடன் உள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் தோழர் திரு. பெ. சண்முகம் மற்றும் மூத்த தலைவர்களை, அக்கட்சியின் மாநில அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அமைச்சருமான மாண்புமிகு செ. ராஜேஷ்குமார், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
