வன்முறை விபத்துகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு பணி வழங்குவது நல்லதுதான்: தொல் திருமாவளவன்
Published : Jul 11, 2026 09:16:28 AM - 4 months ago
விசிக தலைவர் திருமாவளவனை வேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்திலும், மரியாதை நிமித்தமாக நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர் சந்தித்தார்.
வேளச்சேரியில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அடுத்த தலைமுறையினரை பாதுகாக்க அரசு பணி வழங்குவதையும் விசிக ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது விபத்தில், வன்முறைகளில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கு வதையும், .கட்சி சார்ந்து பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்ற பார்வை முக்கியமானது. இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கும் நடைமுறை நல்லது என கருதுகிறேன்.
காவிரி விவகாரத்தில் முதல்வர் பேசவில்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கும் கட்சித் தலைவர்கள் நான் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசுகிறார்கள் என்றார்.
இந்தச் சந்திப்பின்போது, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அமைச்சருமான மாண்புமிகு செ. ராஜேஷ்குமார் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
