News
பழநி முருகன் கோயில் 6 ஆண்டுகளில் ரூ.1414 கோடி வருவாயாக கிடைத்துள்ளது
Published : Jul 10, 2026 07:36:27 PM - 3 weeks ago
“திண்டுக்கல் மாவட்டம் பழநி; 6 ஆண்டுகளில் ரூ.1414 கோடி வருவாயாக கிடைத்துள்ளது பழநி முருகன் கோயிலுக்கு . அதில், 28 கட்டணமில்லா சேவைகளுக்காக ரூ.145.26 கோடி செலவிடப்பட்டுள்ளது என கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
பழநி மலைக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மேலும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் இலவச மற்றும் கட்டண சேவைகளை வழங்கி வருகிறது.
அதில், சிறப்பு கட்டண தரிசனம், அபிஷேகம், அர்ச்சனை, தங்கத் தொட்டில் பிராத்தனை, பூஜை பொருட்கள் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிராசதம் விற்பனை, நன்கொடைகள், சொத்துக்கள், முதலீட்டு வட்டி, தங்கும் விடுதி வாடகை என 33 இனங்கள் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் கோயிலுக்கு ரூ.1414.83 கோடி வருவாயாக கிடைத்துள்ளது.என்று கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
