News
முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கரூர் 27.9.2025 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்குபணிநியமன ஆணை வழங்கினார்.
Published : Jul 10, 2026 06:13:10 PM - 4 months ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சுற்றுலா மாளிகையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் (10.7.2026) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கரூரில் 27.9.2025 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
