2027 பொங்கல் பண்டிகை புதிய தரத்தில் இலவச வேட்டி சேலைகள் வழங்க கைத்தறித் துறை செயலர் தி.ந.வெங்கடேஷ் வெளியிட்ட அரசாணை
Published : Jul 10, 2026 10:39:27 AM - 4 months ago
2027 பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய தரத்தில் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து கைத்தறித் துறை செயலர் தி.ந.வெங்கடேஷ் வெளியிட்ட அரசாணை விவரம்:
பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க அரசு உயர்நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கடந்தாண்டில் இந்தத் திட்டத்துக்காக ரூ.566.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசும் இந்தத் திட்டத்தை தொடரவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.
தங்க நிற ஜரிகை பார்டர்
தொடர்ந்து நிகழாண்டில் பயனாளிகளைக் கணக்கீடு செய்வதற்காக மாவட்ட வாரியாக ஆய்வு செய்தபோது 2 கோடியே 27 லட்சத்து 83,417 சேலைகளும், 2 கோடியே 25 லட்சத்து 14,094 வேட்டிகளும் கொள்முதல் செய்ய வேண்டிய தேவை உள்ளது.
அதற்கான கால அவகாசம் குறைவாக இருப்பதால், கடந்த 3 ஆண்டுகளைப் போலவே சுமார் 177.64 லட்சம் சேலைகள், 177.22 லட்சம் வேட்டிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் கூடுதல் தரத்துடன் புதிய ரக நூலில் வேட்டிகள், சேலைகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. சேலைகளில் சில்வர் அல்லது காப்பர் நிற ஜரிகை பார்டரும், வேட்டிகளில் வண்ண பாலியஸ்டர் பார்டரும் இடம் பெறவுள்ளது.
