News
முதல்வர் கரூர் வருகையை முன்னிட்டு 6500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Published : Jul 10, 2026 09:56:47 AM - 3 weeks ago
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு அரசுப் பணிக்கான ஆணையை வழங்க முதல்வர் விஜய் இன்று கரூர் செல்கிறார் .
சுமார் 10 கிமீ ரோடு ஷோ பயணம் செய்யும் விஜய், கரூர் - சேலம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்க இருக்கிறார்.
தனி விமானம் மூலமாக திருச்சி வரும் முதல்வர் விஜய்
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு கரூர் வருகிறார். அந்த வழி முழுவதும் முதல்வர் விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. 10 கிமீ தூரத்திற்கு முதல்வர் விஜய் ரோடு ஷோ செல்ல உள்ளார். இதன்பின் கரூர் - சேலம் பைபாஸ் சாலையில் உள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
