2025-26-ம் நிதியாண்டுக்கான தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி வட்டி எப்போது வரவு வைக்கப்படும்?
Published : Jul 09, 2026 06:14:11 PM - 3 weeks ago
2025-26-ம் நிதியாண்டுக்கான தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி (EPFO) உறுப்பினர்கள் கணக்கில் இருக்கும் பணத்துக்கான வட்டி எப்போது வரவு வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
2025-26-ம் நிதியாண்டுக்கு (EPFO) பிஎஃப் கணக்குக்கான வட்டி 8.25% வழங்கப்படும் என்று மத்திய அரசு கடந்த 1-ம் தேதி அறிவித்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பிஎஃப் கணக்குக்கான வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
2020-21-ம் ஆண்டில் அதிகபட்சமாக ஆண்டுக்கு 8.50% வட்டி வழங்கப்பட்டது. அதன்பின் கொரோனா காலத்தில் வட்டி 8.10% ஆகக் குறைக்கப்பட்டு, 2022-ம் ஆண்டில் 8.15% என சற்று உயர்த்தப்பட்டு, 2023-ம் ஆண்டில் இருந்து 8.25 சதவீதமாகவே இருந்து வருகிறது.
பிஎஃப் கணக்குக்கு 2025-26-ம் ஆண்டுக்கான வட்டியை மத்திய அரசு வரவு வைக்கும்பட்சத்தில் ஏறக்குறைய 34 கோடி உறுப்பினர்கள் பயன்பெறுவார்கள்.
வட்டி எப்போது வரவு வைக்கப்படும்?
மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியது: “பிஎஃப் அமைப்பில் இருக்கும் 34 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு வட்டி ரூ.1.44 லட்சம் கோடி செலுத்தப்பட இருக்கிறோம். இந்த வட்டி வரும் 15-ம் தேதிக்குள் அவர்களின் பிஎஃப் கணக்கில் 8.25 சதவீத வட்டி வரவு வைக்கப்படும்.
