ஒரு சில ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம் கர்நாடக மாநிலம், மங்களூரு சென்டர்ல் ரயில் நிலையத்திலிருந்து ஜூலை 13, 20, 27, ஆக்ஸ்ட் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் வாரம்தோறும் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு ரயில் எண் 06126 புறப்படும். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு மறுநாள் காலை 10.55 மணிக்கு வந்தடையும்.
மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரிலிருந்து ஜூலை 14, 21, 28, ஆகஸ்ட் 4, 11, 18, 25, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ரயில் எண் 06125 புறப்படும். மங்களூரு சென்டர்ல் ரயில் நிலையத்துக்கு மறுநாள் காலை 8.40 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் திருப்பூர், காட்பாடி, பெரம்பூர் வழியாக இயக்கப்படவுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆகஸ்ட் 12, 19, 26, செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் வாரம்தோறும் புதன்கிழமை பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் ரயில் (06119) மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து ஆகஸ்ட் 13, 20, 27, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் காலை 10.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில், காட்பாடி, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும்.
திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆகஸ்ட் 12, 19, 26, செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் மாலை 3.45 மணிக்கு புறப்படும் ரயில் (06110) மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மறுமார்க்கத்தில், தாம்பரத்திலிருந்து ஆகஸ்ட் 13, 20, 27, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் சென்றடையும் இந்த ரயில் செங்கோட்டை, ராஜபாளையம், மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.
மேலே குறிப்பிடப்பட்ட 6 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவும் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
