துணைவேந்தர்கள் தேடல் குழுவில், உறுப்பினர்களின் எண்ணிக்கையை 3-இல் இருந்து 5 ஆக உயர்த்துவது ஆளுநரின் விருப்பத்திற்கு. துணை போகும் தமிழ்நாடு அரசு - உயர்கல்வித்துறை
Published : Jul 09, 2026 07:23:48 AM - 3 weeks ago
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் புதிய நடைமுறையைத் தமிழக அரசு முன்வைத்துள்ளதாகவும் ஆளுநரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு, அவரின் விருப்பத்திற்கு ஏதுவாக இந்த புதிய ஏற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் தமிழச்சி தங்கப்பாண்டியன் சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது, " மரியாதைக்குரிய கழகத் தலைவர் அண்ணன் ஸ்டாலின் தலைமையிலான, திராவிட மாடல் ஆட்சியின் போது, நெடிய சட்டப்போராட்டம் நடத்தி, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சர் தான் இருக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பைப் பெற்றோம். அந்தச் சட்டத்தின் செல்லுபடியாக்கம் தொடர்பான வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், துணைவேந்தர்கள் தேடல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC -University Grants Commission) பிரதிநிதியை சேர்க்கும் நோக்கில், உறுப்பினர்களின் எண்ணிக்கையை 3-இல் இருந்து 5 ஆக உயர்த்துவது குறித்து பேசுவதும், அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு - உயர்கல்வித்துறை முன்னெடுப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
