செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்
Published : Jul 08, 2026 08:15:19 PM - 3 weeks ago
சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் இருவரும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்
தமிழ்நாடு சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்திய திருநாவுக்கரசு உள்பட 9 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர்
இதையடுத்து இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல் "ரூ.35 கோடி பேரம் என்பது யூகம்தான். குதிரை பேரத்துக்கு ஆதாரம் உள்ளதா குதிரை பேரம் எனக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளதா திருநாவுக்கரசு அசோக் குமார் ஒரே நாளில் ஈரோட்டில் இருந்தது ஒரு ஆதாரமா 59 எம்எல்ஏக்களை கொண்ட திமுகவால் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும்
இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதன்படி தினமும் காலையும், மாலையும் இருவரும் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
