பால் தயிர் நாளை முதல் உயர்வு -ஆரோக்யா பால் நிறுவனம்
Published : Jul 08, 2026 03:31:55 PM - 4 months ago
சென்னை: தமிழகம் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களில்
கடந்த ஓராண்டாகவே பால் உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது. வரலாறு காணாத அளவில் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தனியார் பால் நிறுவனங்கள், பால் வணிகத்தை தக்கவைத்துக்கொள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கி வருகின்றன. இவ்வாறு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதால் தங்களுக்கு ஏற்படும் கூடுதல் இழப்பைச் சரிகட்ட, நுகர்வோருக்கான பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்த தனியார் நிறுவனங்கள் தற்போது முடிவு செய்துள்ளன.
அதன்படி, தனியார் ஆரோக்யா பால் நிறுவனம் நாளை ஜூலை 9ஆம் தேதி முதல்
பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1 . 500 மில்லி சமன்படுத்தப்பட்ட பால் ரூ.29-ல் இருந்து ரூ.31 ஆகவும்,
2 ,நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.35-ல் இருந்து ரூ.37 ஆகவும்,
3. கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.39-ல் இருந்து ரூ.41 ஆகவும்
4. இதேபோல்,1000மில்லி (1 லிட்டர்) சமன்படுத்தப்பட்ட பால் ரூ.54-ல் இருந்து ரூ.57 ஆகவும்,
5. நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.66-ல் இருந்து ரூ.69 ஆகவும்,கொழுப்பு சத்து
6. செரிவூட்டப்பட்ட பால் ரூ.73-ல் இருந்து ரூ.76 ஆகவும்,
7. 500 கிராம் ஹட்சன் தயிர் ரூ.42-ல் இருந்து ரூ.44 ஆகவும்,
8 ஆரோக்யா தயிர் ரூ.40-ல் இருந்து ரூ.42 ஆகவும் விலை அதிகரிக்கிறது
