25% ஊதிய உயர்வு டாஸ்மாக் ஊழியர்களுக்கு அமைச்சர் விக்னேஷ் தகவல்
Published : Jul 07, 2026 07:54:11 PM - 4 months ago
ஜூலை 07 டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க தமிழக முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவிப்பு அடுத்த மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது” என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் தெரிவித்த அமைச்சர்“கள்ளச்சந்தையில் மது விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கும் பிரச்சினை தொடருகிறது. பாட்டிலுக்கு மேல் கூடுதலாக வசூலிக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர். ஊழியர்களின் பிரச்சினையை படிப்படியாக தீர்க்கவும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.டாஸ்மாக் மேற்பார்வையாளர் சம்பளம் ரூ.22,313
டாஸ்மாக் துணை விற்பனையாளர்கள் சம்பளம் ரூ.17,925 ஆகவும், டாஸ்மாக் விற்பனையாளர்கள் சம்பளம் ரூ.19,413 ஆகவும், உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இதுவரை, இந்த துறையில், இப்படியொரு ஊதிய உயர்வு வழங்கப்பட்டதில்லை. ஊதிய உயர்வு மூலம் ரூ.110.74 கோடி கூடுதலாக செலவு ஆகிறது.அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
