இஸ்லாமியர்களுக்கும் கழகத்துக்குமான அந்த உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது-சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
Published : Jul 05, 2026 07:34:55 PM - 4 weeks ago
இஸ்லாமியர்களுக்கும் கழகத்துக்குமான அந்த உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது-சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை திருவேற்காட்டில், தி.மு.கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் கே.காஜா அவர்களின் பேத்தி சமீனா சப்ரியத் - ஹனீஃப் கான் அவர்களின் திருமண விழாவில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். விழாவில் ஏராளமான கழக முன்னணியினர் பலரும் கலந்துகொண்டனர்.மணமக்களை வாழ்த்திப் பேசிய உதயநிதி ஸ்டாலின்
இன்று கழகத்தின் தலைமை நிலையச் செயலாளரும், நம் அருமை அண்ணன் துறைமுகம் காஜா அவர்களின் பேத்தி சமீனா சப்ரியத் - ஹனீஃப் கான் அவர்களின் திருமண விழாவில் பங்கேற்று, உங்களோடு சேர்ந்து மணமக்களை வாழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
துறைமுகம் காஜா அவர்களும், பூச்சி முருகன் அவர்களும் அண்ணா அறிவாலயத்தின் இரண்டு தூண்கள் என்று பெருமையோடு திமுக தலைவர் குறிப்பிடுவார்.என்றும்
இன்றைக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதை, நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். என்ன நடந்தாலும், இன்றைக்குச் சில பேர் சோஃபா வந்த உடனே நம்மை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள், ஆனால், நீங்கள் அத்தனை பேரும் நாங்கள் என்றைக்கும் கழகத்துடன் இருப்போம் என்று உறுதியோடு வந்திருக்கிறீர்கள். ஏன்னென்றால் இஸ்லாமியர்களுக்கும் கழகத்துக்குமான அந்த உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது, யார் என்ன சொன்னாலும், எந்த அவதூறுகளைப் பரப்பினாலும் சிறுபான்மை மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கழகம் என்றைக்குமே ஒரு காவல் அரணாக நிச்சயம் இருக்கும். உங்களோடு நம் தலைவர் அவர்களும் திராவிட முன்னேற்றக் கழகமும் உறுதுணையாக நிற்கும் என்று கூறிக்கொண்டு, இப்பொழுது ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த அரசியல் பேரிடர் காலத்திலும் நம் தமிழ்நாட்டை, நம் திராவிட முன்னேற்றக் கழகம், நம் தலைவர் அவர்களும் நிச்சயம் உங்களுக்காக நின்று காப்போம், தமிழ்நாட்டை மீட்போம் என்று கூறி, மணமக்களுக்கு மீண்டும் உங்களின் அத்தனை பேரின் சார்பாக என் வாழ்த்துகளைக் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்
