News
எதிர்க்கட்சி தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் இலங்கை எம்.பி. திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு
Published : Jul 05, 2026 01:34:24 PM - 4 months ago
எதிர்க்கட்சி தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் இலங்கை எம்.பி. திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு!
தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்- திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணிச் செயலாளருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களைச் சந்தித்தார். போருக்குப் பிந்தைய சூழலில் ஈழத்தமிழர்கள் சந்திக்கும் நெருக்கடிகளை எதிர்க்கட்சித் தலைவருக்கு அவர் விரிவாக விளக்கினார்.
கழகத் தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, கடந்த டிசம்பர் மாதம் அவரைச் சந்தித்து, ஈழத்தமிழர் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்ததையும், உடனடியாக ஒன்றிய அரசுக்கு கழகத் தலைவர் அவர்கள் கடிதம் எழுதி வலியுறுத்தியதையும் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர் உரிமைகளுக்காக பேரறிஞர் அண்ணா காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து குரல்கொடுத்துத் துணை நின்று வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை உலகத்தமிழர்கள் அறிவார்கள். அந்த வகையில், ஈழத்தமிழர் நலன் சார்ந்து அவர் கூறியவற்றை, கழகத் தலைவர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்று ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் செயல்படுவோம் என்று அவருக்கு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது, நம் முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலை வழங்கி, 'இலங்கை தி.மு.க.' குறித்து எழுத்தாளர் ஷோபாசக்தி அவர்கள் எழுதிய கட்டுரையும் அந்த நூலில் இடம் பெற்றிருப்பதை திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது x தளத்தில் பதியப்பட்டுள்ளது