மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சீ.ரமேஷ் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
Published : Jul 05, 2026 01:27:34 PM - 4 weeks ago
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சீ.ரமேஷ் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சீ.ரமேஷ் அவர்கள் தலைமையில் (04.07.2026) சென்னை, நுங்கம்பாக்கம், ஆணையர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் திட்டங்கள், சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட கூடிய புதிய அறிவிப்புகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள், துறையில் செயல்படுத்தப்படும் திருப்பணிகள், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார். உடன் வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை அரசு செயலாளர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டாக்டர் டி.ஜி. வினய், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் முனைவர் துரை ரவிச்சந்திரன், இ.ஆ.ப., திருமதி என்.பொன்மணி, இ.ஆ.ப., திரு.பொ.ஜெயராமன், திருமதி சி. கல்யாணி திருமதி இரா.வான்மதி, திரு. எஸ். சிவகுமார், துறை அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்ளனர்.
