தவெகவின் குதிரை பேர அரசியல், அதிகார துஷ்பிரயோகத்திற்கு நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் திமுக புகார் மனு
Published : Jul 05, 2026 01:09:54 PM - 4 weeks ago
தவெகவின் குதிரை பேர அரசியல், அதிகார துஷ்பிரயோகத்திற்கு நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் திமுக புகார் மனு!
ஜூலை 05 ; தி.மு.க. சார்பில் மாண்புமிகு ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட சீர்காழி மற்றும் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி, இடைத்தேர்தலில் த.வெ.க.கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறச் செய்வதாக திரு.வைகோ அவர்கள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்ததை மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் தெரிவித்து, அதன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
திருச்செந்தூர் தொகுதி கழக சட்டமன்ற உறப்பினர் திரு. அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ., அவர்களை அவதூறு வழக்கில் கைது செய்து தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஐந்து மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.கட்சியில் இணைந்திட வற்புறுத்தியதை பற்றியும்
நாகர்கோவில் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆஸ்டின் அவர்களை த.வெ.க.சார்பில் அவரை தொடர்பு கொண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.கட்சியில் இணைந்திட வலியுறுத்தியதுடன், அவர் விரும்பிய துறை அமைச்சர் பதவி கொடுப்பதாக நிர்ப்பந்தித்து குறித்தும்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நண்பர்கள், திரு. ஜான்ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணுரெட்டி ஆகியோர் அரசு அலுவல்களில் தலையிடுவதையும் – அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொண்டதையும் மற்றும் அவர்களுக்கு தலைமைச் செயலகத்தில் தனியாக அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும் – அதேபோல், முதலமைச்சரின் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாக முதலமைச்சர் அவர்களின் தனி பாதுகாவலர் ஒருவர் பணியாற்றி வருவதும், அவர் முதலமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட எல்லா நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சருடன் சட்டத்திற்கு புறம்பாக அவருடைனே பயணிப்பது குறித்தும் மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
மேற்சொன்ன புகார்களை கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி - நாகர்கோவில் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டின், எம்.எல்.ஏ., - தலைமைக் கழக தலைமை சட்ட ஆலோசகர் பி.வில்சன், எம்.பி., - சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன், Ex.M.L.A.. ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்து, புகார் கடிதத்தை மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் அளித்தனர். அனைத்து புகார்களையும் – புகார்களின் சாரம்சங்களையும் கவனமுடன் கேட்டறிந்த மாண்புமிகு ஆளுநர் அவர்கள், இதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்
