News
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சனை நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
Published : Jul 04, 2026 12:16:17 PM - 4 months ago
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சனை நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று புதுச்சேரி எழில் நகரில் உள்ள தனது சொந்தச் சகோதரர் மரியாஜோசப் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக நீதி அமைச்சர் மரியவில்சன் நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை (Charge sheet) நேரில் பெற்றுக்கொள்வதற்காக அவர் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
