அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக வில் இருந்து விலகி தவெக கட்சியில் இணைந்தனர்
Published : Jul 02, 2026 03:42:11 PM - 4 weeks ago
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆனந்த், அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னினையில் தவெக கட்சியில் இணைந்தனர்
தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவருக்கும் தவெக கட்சித் துண்டை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மேலும், இவர்களோடு சேர்ந்து தவெகவில் இணைந்த அதிமுகவின் நிர்வாகிகள் பலருக்கும் தவெக துண்டை அணிவித்து ஆனந்த் வரவேற்றார்.
சி.விஜயபாஸ்கர், இணைப்பு விழாவில் உரையாற்றிய போது“புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் தவெகவில் இணையும் முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். தவெக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று, தேர்தலுக்கு முன்னதாகவே நாங்கள் எங்கள் தலைமையிடம் கடுமையாக வலியுறுத்தினோம். தலைமை செவி கொடுக்கவில்லை தமிழக மக்கள் ஏகோபித்த ஆதரவை தவெகவுக்கு வழங்கி இருக்கிறாரகள். எனவே, நாம் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதற்கும் தலைமை செவி மடுக்கவில்லை.
எம்ஜிஆரால் தீய சக்தி என அடையாளம் காட்டப்பட்ட திமுகவோடு கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
அண்டை மாநிலங்களை அதிரவைத்திருக்கும் மக்கள் விரும்பிய மாற்றத்தின் சக்தி நமது முதல்வர் விஜய். தமிழக அரசியலில் சத்தமின்றி மவுனப் புரட்சியாக மாபெரும் அரசியல் புரட்சியை நிகழ்த்தியவர் விஜய். தமிழக மக்களை தனது நெஞ்சிலே குடியமர்த்தி இருக்கும் ஒரு தலைவரை நாம் பெற்றிருக்கிறோம்.
. அதனால், இந்த இணைப்பு மகிழ்ச்சியை, மலர்ச்சியை, நம்பிக்கையை, புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது
தவெக வெற்றி பெறும். உறுதியான அந்த ஒற்றைத் தலைமையில் நாம் பயணித்து வெற்றி வாகை சூடுவோம்.உங்களுக்கு துணை நிற்போம், உழைப்போம். எங்கள் உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும் இந்த நல்லாட்சி தொடர்ந்திட உழைத்திடுவோம்.
இங்கே நீங்கள் பார்ப்பது வெறும் ட்ரெயிலர்தான். மெயின் பிக்சரை டெல்டாவில் காட்டுவோம். தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் மாபெரும் இணைப்பு விழாவை, இன்னொரு இணைப்பு விழாவை நாங்கள் அங்கு நடத்துவோம்” என தெரிவித்தா
பின்னர் பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர், “தீய சக்தி திமுகவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவை தொடங்கியவர் எம்ஜிஆர்.
எடப்பாடி பழனிசாமியை நாங்கள் எல்லாம் சேர்ந்துதான் அதிமுகவின் பொதுச் செயலாளராக ஆக்கினோம். ஆனால், அவரது தவறான முடிவுகளால் அந்த இயக்கம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
