திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் - நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம்
Published : Jun 30, 2026 01:48:00 PM - 4 months ago
திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் - நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம்
நடிகர் ராகவா லாரன்ஸ் திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என விளக்கமளித்துள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தர்மமில்லை. அரசியலுக்கு வர மக்களிடம் ஏன் கேட்க வேண்டுமென சிலர் பேசுகின்றனர் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள x தள வீடியோவில்; திருச்சி கிழக்கில் நான் நிற்பது தர்மமே இல்லை. அக்கட்சிக்காக உழைத்தவர்கள் நிற்க வேண்டும். அதற்காக நான் அரசியலுக்கு வரப் போவதே இல்லை என கிடையாது. அவசரப்பட வேண்டாம், பொறுமையாக அடியெடுத்து வைப்போம். எங்கு நமக்கு நல்ல மரியாதை கிடைக்கும், யாருடன் சேர்ந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றெல்லாம் யோசித்து முடிவெடுப்பேன்.
கட்சியில் உறுப்பினராக சேர்ந்து வளர்ந்து உழைத்து வந்து அந்த கட்சியில் பதவி கேட்டு அந்த தொகுதியில் நிற்கலாம் ஆனால் அந்த கட்சில போஸ்டர் ஒட்டி வளர்ந்த ஒருவரை விட்டுவிட்டு நான் நிற்பது தர்மம் இல்லை
