News
அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை திடீரென வாபஸ் பெற்றார் டி.ஆர்.பாலு
Published : Jun 30, 2026 01:20:17 PM - 4 weeks ago
கடந்த 2023-ம் ஆண்டில் பா.ஜ.க மாநிலத் தலைவராக இருந்தபோது அண்ணாமலை வெளியிட்ட 'தி.மு.க ஃபைல்ஸ்' விவகாரம் தொடர்பாக, அவர் மீது தி.மு.க பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு தொடர்ந்திருந்த அவதூறு வழக்கு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையின் போது, அண்ணாமலை நேரில் ஆஜராகி டி.ஆர்.பாலுவிடம் நேரடியாகக் குறுக்கு விசாரணை நடத்தியிருந்தார். இந்தச் சூழலில், அண்ணாமலைக்கு எதிராகத் தான் தொடர்ந்த அவதூறு வழக்கை டி.ஆர்.பாலு திடீரெனத் திரும்பப் பெற்றுள்ளார்.
