பெட்ரோல், டீசல் ,சி.என்.ஜி வாகனங்கள் பதிவு படிப்படியாக நிறுத்தப்படும் டெல்லி அரசு அறிவிப்பு
Published : Jun 30, 2026 12:59:28 PM - a month ago
பெட்ரோல், டீசல் ,சி.என்.ஜி வாகனங்கள் பதிவு படிப்படியாக நிறுத்தப்படும் டெல்லி அரசு அறிவிப்பு
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம். புதிய உத்தரவு நாளை முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு தகவல்.
டெல்லியில் மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு 30 ஆயிரம் ரூபாய் மானியம். பெட்ரோல், சி.என்.ஜி. வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்படுவது படிப்படியாக நிறுத்தப்படும் டெல்லி அரசு அறிவிப்பு.
அதேபோல, 2028 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மின்சார இருசக்கர வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய முடியும். பள்ளி பேருந்துகளும் மின்சார பேருந்துகளாக மாற்ற டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. மின் வாகனங்களை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் மானியத்தையும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.
மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்குபவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் மின்சார ஆட்டோக்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் , N1 மின்சார டிரக்குகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் மானியம் வழங்கப்படும். பழைய வாகனங்களை அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கப்படும்.
