தமிழக அரசின் சார்பில் 300 புதிய பேருந்துகள் சேவையை பச்சை கொடியசைத்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்
Published : Jun 25, 2026 02:46:10 PM - a month ago
தமிழக அரசின் சார்பில் 300 புதிய பேருந்துகள் சேவையை பச்சை கொடியசைத்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. போக்குவரத்துறை அமைச்சர் சேலம் பார்த்திபன் தமிழக முதல்வர் விஜய் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
124 டீசல் பேருந்துகள், 136 சிஎன்சி பேருந்துகள் என சென்னை உட்பட மொத்தம் ஆறு கோட்டங்களுக்கான பேருந்துகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார். விழுப்புரம் கோட்டத்திற்கு 31 பேருந்துகளும், சேலம் கோட்டத்திற்கு 39, கோவை கோட்டத்திற்கு 25 பேருந்துகளும், கும்பகோணம் கோட்டத்திற்கு 49 பேருந்துகளும், மதுரை கோட்டத்திற்கு 42 பேருந்துகளும், நெல்லை கோட்டத்திற்கு 44 பேருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
பச்சை கொடியசைத்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர் விஜய் தொடர்ந்து திருவல்லிக்கேணியிலிருந்து பெரம்பூர் செல்லக் கூடிய 29A மாநகர பேருந்தில் சிறிது தூரம் பயணித்தார். தலைமைச் செயலகத்தில் இருந்து போர் நினைவு சின்னம் வரை பேருந்தில் பயணம் செய்தார். அவருடன் போக்குவரத்துறை அமைச்சர் பார்த்திபன், தலைமைச் செயலாளர் சாய்குமார், போக்குவரத்துத்துறை செயலாளர் வள்ளலார் ஐஏஎஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
முதல்வர் விஜய் பேருந்தில் செல்வதால் அந்த பகுதியில் சுமார் 15 நிமிடத்திற்கு மேலாகப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அவதியடைந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விஜய் பேருந்தில் செல்ல தாங்கள் ஏன் 15 நிமிடங்களாக வெயிலில் நிற்க வேண்டும்' என அங்கிருந்த போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேருந்தில் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் மேற்கொண்ட முதல்வர் விஜய், நடத்துனரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து, நடத்துனரை தனது அருகில் அமரச் சொல்லி அவர்களின் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், ஓட்டுநர் அருகே முன்புற இருக்கைக்குச் சென்ற முதல்வர் விஜய், தனது செல்போனில் சாலையில் நிற்கும் மக்களையும் பேருந்து பயணத்தை அவரே விடியோவாக பதிவிட்டு பயணம் மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 29ஏ பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய் பின்னர் அதே பேருந்தில் தலைமைச் செயலகம் திரும்பினார்
