மின்சாரத்துறையின் நிதி நிலைமை மற்றும் செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டார்
Published : Jun 25, 2026 12:14:47 PM - 4 months ago
சென்னை: மின்சாரத்துறையின் நிதி நிலைமை மற்றும் செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டார். அவர், ''கடந்த 25 வருடங்களாக மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது'' என்றார்.வெள்ளை அறிக்கை விபரம் பின்வருமாறு;* 2001-2006: வருவாய் ரூ.59,084 கோடி, செலவு ரூ.67,439 கோடி, பற்றாக்குறை ரூ.8,355 கோடி.* 2006-2011: வருவாய் ரூ.92,737 கோடி, செலவு ரூ.1,28,200 கோடி, பற்றாக்குறை ரூ.35,463 கோடி.* 2011-2016: வருவாய் ரூ.1,92,971 கோடி, செலவு ரூ.2,49,332 கோடி, பற்றாக்குறை ரூ.56,361 கோடி.* 2016-2021: வருவாய் ரூ.3,20,140 கோடி, செலவு ரூ.3,78,674 கோடி, பற்றாக்குறை ரூ.58,534 கோடி.* 2021-2026: வருவாய் ரூ.4,97,996 கோடி, செலவு ரூ.5,32,443 கோடி, பற்றாக்குறை ரூ.34,447 கோடி
25 வருடங்களாக..
வெள்ளை அறிக்கை வெளியிட்டு அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: கடந்த 25 வருடங்களாக மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 25 வருடங்களுக்கு முன்பு லாபம் இல்லை என்றால் நஷ்டம் இல்லாமல் இருந்தது. புதிய பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, திட்டங்கள் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.87,399 கோடி கடன் வாங்கப்பட்டு உள்ளது. கூடுதல் வருவாய் வந்துள்ளது. அதேநேரத்தில் செலவினம் அதிகம் வந்துள்ளது. ஆனால் முன்னேற்ற திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. இது ஏன் என்று கேள்வி கேட்கிறோம். தமிழக மின்சாரத்துறைக்கு 1.40 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். 1.40 லட்சம் பணியாளர்களில் 74,714 லட்சம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 65,921 பேர் பற்றாக்குறையாக உள்ளனர். மின்சாரத்துறையில் 15 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த, அரை மணி நேரத்தில் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது விரைவில் நிறைவேற்றப்படும். இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.
