News
நேரடி நெல் கொள்முதல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்க தீவிர நடவடிக்கை: அரசு அறிவுறுத்தல்
Published : Jun 25, 2026 11:42:46 AM - a month ago
(24.06.2026) தலைமைச் செயலகத்தில்,தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்தல், பாதுகாப்பாக வைத்தல், அரவைக்கு அனுப்புதல் ஆகியவை தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. பி. வெங்கடரமணன், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வ. காந்திராஜ், மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ஆர். வினோத் ஆகியோர் முன்னிலையில், இக்கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் பு. உமாநாத், இ.ஆ.ப., குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறை இயக்குநர் திரு. க. வெங்கடராமன், இ.கா.ப., வேளாண்மை - உழவர் நலத்துறை செயலாளர் மேலும் பல துறை சார்ந்த அலுவலரகள் கலந்து கொண்டனர்
நெல் மூட்டைகளின் ஈரப்பதம் அளவான 17 சதவீதத்துக்கும் குறைவாக இருக்குமாறு கண்காணிக்கவும் தேவையான காற்றோட்ட வசதிகள்
நெல் பதர்கள் தேங்காமல் உடனுக்குடன் அகற்றவும்
நெல் கொள்முதல் நிலுவைத் தொகை ரூ.129.82 கோடியை உடனே விடுவிக்க தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு அலுவலரிடம் வலியுறுத்தப்பட்டது.
