News
முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் டிஜிட்டல் சேவைகள் பற்றிய ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
Published : Jun 25, 2026 11:12:28 AM - 4 months ago
(24.6.2026) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ரா. குமார், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், இ.ஆ.ப., நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப., தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ், இ.ஆ.ப., துறைத் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்
