News
மின்துறை தொடர்பான வெள்ளை அறிக்கை நாளை வெளியிடப்படும் - நிர்மல் குமார் தகவல்
Published : Jun 24, 2026 08:18:45 PM - 4 months ago
மின்துறை தொடர்பான வெள்ளை அறிக்கை நாளை வெளியிடப்படும் - நிர்மல் குமார் தகவல்
மின்துறை தொடர்பான வெள்ளை அறிக்கை நாளை வெளியிடப்படும். மின்வாரியத்தில் 15,000 பேரை நியமிக்க 30 நிமிடத்தில் முதல்வர் ஒப்புதல் அளித்தார். கடந்த ஆட்சியில் மின்துறை உருக்குலைந்து விட்டது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சாரத் துறையின் வெள்ளை அறிக்கை வரும் ஜூன் 25-இல் வெளியிடப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சார வாரியத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விரிவான தகவல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
