சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 173 வது படத்தின் தலைப்பு தர்மன்
Published : Jun 24, 2026 07:55:30 PM - 4 months ago
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 173 வது படத்தின் தலைப்பு தர்மன்
விழாவில் ரஜினி, கமல் மற்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கலந்துகொண்டனர்.
“இது 5 ரூபாய் மருத்துவரின் படம் கிடையாது. ‘தர்மன்’ என்கிற மருத்துவரின் ஸ்வாக் ஆன பேமிலி என்டெர்டெயினர்” மேலும், கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ மாதிரியான படம் இது என்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூறினார். இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
முன்னதாக, ‘ரஜினி 173’ படத்தின் தலைப்பு படத்துக்கு ‘தர்மன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கூடவே படத்தின் டைட்டில் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தறிக்கும் இந்த படத்தை கே.எஸ் .ரவிக்குமார் பிறகு சுந்தர் சி , மற்றும் சி பி சக்கரவர்த்தி இயக்குவதாக இருந்த நிலையில் தற்போது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
இயக்குகிறார் .சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில்
அனிருத் இசையில் இந்த கூட்டணியில் வெளி வர இருக்கும் தர்மன் படம் பெரும் எதிர் பார்ப்பை கொண்டுள்ளது
