ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையே இருக்கும் நிர்வாக அணுகுமுறை வேறு. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்-முதல்வர் விஜய்,
Published : Jun 23, 2026 03:56:10 PM - 4 months ago
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய
முதல்வர் விஜய், ``எதிர்கட்சியினருக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ், கலாச்சாரம் என்று சொல்லி இரட்டை வேஷம் போடுபவர்கள் நாங்கள் இல்லை. தமிழ் எங்கள் உயிர்நாடி என்பதில் உறுதியாக இருப்போம். மாநில உரிமைகளில் எப்போதும் உறுதியாக இருப்போம்.
அதேசமயம் அரசியல் வேறு, ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையே இருக்கும் நிர்வாக அணுகுமுறை வேறு. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
எங்களுக்கு பாடம் எடுப்பதாக சொல்லி உங்கள் வேஷங்களை நீங்களே கலைத்து கொள்கிறீர்கள். அதை மறந்துவிடாதீர்கள். அதேபோல நேற்று எதிர்கட்சி தலைவர் எங்களை 'ஈவில்ஸ் 'ஈவில்ஸ்', என்றார். 'ஈவில்ஸ்' என்பதை டெவில்ஸ் பேச கூடாது. அவர்கள் இருந்திருந்தால் ஒரு ஆக்ஷன் இங்கு பண்ணிருப்பேன். எல்லாரும் வெளிநடப்பு பண்ணிவிட்டார்கள் என்று கூறினாலும் ஆக்ஷனோடு பேச்சை முடித்துகொண்டார்.
